நல்வரவு

வணக்கம். வருக.

விழிமைந்தனின் எழுத்துக்களின் வாசஸ்தலமாக அமையப்போகும் piraveenan.lk இணையத் தளத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறோம். திருவள்ளுவர் ஆண்டு 2049 (விளம்பி வருடம், ஆங்கில வருடம் 2018) சித்திரைப் புத்தாண்டுடன் இந்த இணையத்தளம் இணையவெளியில் தனது மின்னியல் பயணத்தைத் தொடங்கி இருக்கிறது. விழிமைந்தனின் கவிதைகள், ‘கவிவிதை’கள், விஞ்ஞானப் புனைகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், வலைப்பூப் பதிவுகள், மற்றும் ஏனைய கிறுக்கல்களை இந்த இணையத்தளத்தில் நீங்கள் பார்வையிடலாம். நீங்கள் உங்கள் கருத்துக்களை இந்த இணையத்தளத்தில் பதிவு செய்வதையும் இந்த இணையத்தளத்தில் வெளிவரும் பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர்வதையும் மிகவும் வரவேற்கிறோம். ‘தொடர்பு கொள்க’ வசதியைப் பாவித்து நீங்கள் விழிமைந்தனுடன் தொடர்பு கொள்ளவும் உங்கள் அபிப்பிராயங்களை அறியத்தரவும் முடியும். விழிமைந்தனின் ஆக்கங்கள் பற்றி மட்டுமன்றி இந்த இணையத்தளத்தின் வடிவமைப்புக் குறித்தும் உங்கள் கருத்துக்களைச் சொல்லலாம்.

இன்றைக்கு வந்திருக்கிற நீங்கள் மீண்டும் மீண்டும் வருவீர்களென்றும் piraveenan.lk இணையத்தளத்தின் பிரியமான, பங்களிப்புச் செய்கின்ற வாசகராக விளங்குவீர்கள் என்றும் நம்பிக்கையுடன் எதிர் பார்க்கிறோம்.

எதிர்காலத்தில் வேறு எழுத்தாளர்களின் படைப்புகளும் (அல்லது, இணையத்தில் அப்படைப்புகள் ஏற்கனவே இருக்குமாயின், அவற்றிற்கான இணைப்புகளும்) அவர்களின் அனுமதியுடன் இங்கே பகிரப்படும்.

மறுபடியும் உங்கள் வரவை முகமலர்ந்து வரவேற்று விடைபெறுகிறோம்.

பிரியமுடன்,

piraveenan.lk வலைத்தள நிர்வாகம்.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *