ஏலியன் கதைகள்

விழிமைந்தனின் ஏலியன் கதைகள் |  கலை இலக்கியக் கள வெளியீடு அறிமுகம் ‘ஏலியன் கதைகள்’ வேற்றுக்கிரக உயிரினங்களைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட கற்பனைக் கதைகளாகும். இலங்கையின் ‘தினக்குரல்’ பத்திரிகையில் தொடராக வெளிவந்த இக்கதைகள் 2014 ஆம் ஆண்டு நூலாக வெளிவந்தன. விஞ்ஞானம், தொழில்நுட்பம், பௌதிகம், உயிரியல் ஆகிய துறைகளைப்பற்றிய பயனுள்ள தகவல்கள் பல இக்கதைகளில் பொதியப்பட்டுள்ளன. வைத்தியர், எழுத்தாளர் எம். கே. முருகானந்தன் அவர்கள் வழங்கிய அணிந்துரை ஆச்சரியமும் புதுமையும்… மேலும் »

2 கருத்துக்கள்

கவிவிதை

விழிமைந்தனின்  கவிவிதைகள் | தேற்றம் வெளியீடு அறிமுகம் ‘கவிவிதை’ என்பது தமிழுக்கு ஒப்பீட்டளவில் புதிய வடிவமாகும். ‘பாட்டிடையிட்ட உரைநடை’ என்பது சிலப்பதிகார காலத்திலிலேயே வழக்கிலிருந்தாலும் ‘கவிவிதைகள்’ ஒவ்வொன்றும் உள்ளடக்கத்தில் தன்னிறைவு உடையவை என்றவகையில் வெறுமனே உருவத்தால் மட்டும் வரையறுத்துவிட முடியாதவையாகும். உள்ளடக்கத்தில் சிறுகதைகளையும், உருவத்தில் கவிதை நடையையும் கதைசொல்லற் பாங்கான உரைநடையையும் ஒத்தவை என்பதோடு தமக்குள்ளே முழுக்கவிதை ஒன்றுக்கு அல்லது கதை ஒன்றுக்கு விதையாக அமையக்கூடிய செய்திகளையும் தாங்கியவை கவிவிதைகள்.… மேலும் »

கருத்திடுக

மனதின் உயரம்

வரலாற்று நாவல் ஒன்று எழுத வேண்டும் என்பது என் மனதில் இருக்கிற ஒரு நீண்டகால ஆசை. அதிலுள்ள சிரமங்கள் பல. தமிழர் வரலாறு என்பது இன்றைக்கும் பல மர்மங்கள் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. அங்கும் இங்கும் சில வெளிச்சப்புள்ளிகளை மிகச்சிரமத்தின் மத்தியில் ஆராய்ச்சியாளர் கண்டிருக்கிறார்கள். மீதி இன்றைக்கும் இருள்தான். பல பேர் “எடுத்தேன் கவிழ்த்தேன்” என்று எழுதிவிட்டுப்போகிறார்கள். அதுபோல எழுத நான் விரும்பவில்லை.சில சில பாத்திரங்களையும் சம்பவக் கோர்வைகளையும் என்… மேலும் »

கருத்திடுக

அணு ஆயுதப் போர் அபாயம்

“Now I Am Become Death; The Destroyer Of Worlds.” { कालोऽस्मि लोकक्षयकृत्प्रवृद्धोलोकान्समाहर्तुमिह प्रवृत्तः| ऋतेऽपि त्वां न भविष्यन्ति सर्वे येऽवस्थिताः प्रत्यनीकेषु योधाः ॥ Kaalosmi Lokakshayakrit Pravrddho. Lokaan Samahartum Iha Pravrttah. “நான் இப்போது கால தேவனும் ஆகின்றேன் – உலகங்களை அழிப்பவன் ஆகின்றேன்” } அழிவு மிகுந்த பாரத யுத்தத்திற்கு தயாராகி நின்ற வேளையிலே, தயங்கி நின்ற அர்ஜுனனைப் பார்த்துக்… மேலும் »

கருத்திடுக

சோழர் வரலாறு – சில அவதானங்கள்

சோழர் வரலாற்றை அடியொற்றி சாண்டில்யன், கல்கி போன்றவர்கள் உணர்ச்சி மிகுந்த நாவல்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பாவித்த வரலாற்று ஆதாரங்கள் பெரும்பாலும் சோழர்களால் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள். வேற்றுநாட்டவர்களின் வரலாற்று மூலங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும் வசதி அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. இதனால் அவர்கள் சோழர்கள் பெருமையை மிகைப்படுத்தி எழுதியிருப்பார்களோ என்றால், அது தான் இல்லை. மறு வளமாக, சோழப்பேரரசைப்பற்றி மிகச் சமீபத்தில் வெளிவந்திருக்கும், வெளிநாட்டவர்களால் செய்யப்பட்ட ஆய்வுகள் சோழர்களின் பெருமையை இன்னும் ஒருபடி… மேலும் »

கருத்திடுக

யாழ் விபத்துகள் -III

அருமையான உயிர்கள் அநியாயமாகப் பலியாவதைத் தடுக்க யாழ் மக்களுக்குச் சில பணிவான விதந்துரைகள். (1) இன்றைக்கு யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற வாகனங்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளி விபரங்களை பெற்று சனசமூக நிலையங்கள் முதலிய இடங்களில் காட்சிப்படுத்துங்கள். (2) மோட்டார் சயிக்கிள் மற்றும் சயிக்கிள் ஓடுவோர் எல்லா நேரங்களிலும் மஞ்சள் கோட்டுக்கு இடது புறம் (அதாவது வீதியின் மருங்கில் ) பயணியுங்கள். இது குறிப்பாக மோட்டார் சயிக்கிள் வைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வெறுப்பாகவே… மேலும் »

கருத்திடுக

யாழ் விபத்துகள் -II

இதை இன்னும் ஆழமாகப் பார்க்கலாம். மேலைநாடுகளில் எந்த “ஏழையும்” ஒரு பழைய காராவது வைத்திருப்பார். அது அங்கு அத்தியாவசியம். யாழ்ப்பாணத்தில் அப்படியில்லை. சில தசாப்தங்கள் முன்வரை மெத்தப்பெரிய பணக்காரர்கள் மட்டுமே கார் வைத்திருந்தார்கள். பெரிய அரச உத்தியோகத்தர்களே மோட்டார் சைக்கிள் தன்னும் வைத்திருந்தார்கள். இதனால் வாகனம் என்பது மிக நிச்சயமாக ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகவும் பலரின் நெடுநாள் கனவாகவும் இருந்தது. இன்று அப்படியில்லாவிட்டாலும் பல பேர் தமது நெடுநாள்… மேலும் »

கருத்திடுக

யாழ் விபத்துகள் -I

இம்முறை யாழ்ப்பாணம் சென்றுவந்ததிலிருந்து அங்கு நடக்கும் வீதி விபத்துகளைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன். ஒரு விபத்தைக் கண்கூடாகவே பார்த்தோம். இரு பிள்ளைகளின் தந்தையான ஒரு இளைஞர் கண்ணிமைக்கும் நேரத்தில் போய்விட்டார். “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ்வுலகு” – குறள் நினைவில் வந்தது. பெரும்பாலானவர்கள் “வாகனங்கள் கூடி விட்டன, அதனால் விபத்துகள் நேரிடுகின்றன” என்கிறார்கள். எனக்கு அப்படிப் படவில்லை. வீதி ஒழுங்குகள் பற்றிய புரிதல் விழிப்புணர்ச்சி என்பன… மேலும் »

கருத்திடுக

பேய்த்தேர்

“விழி சுழல வரு பேய்த்தேர் மிதந்து வரு நீர்; அந்நீர்ச் சுழி சுழல வருவதெனச் சூறை வளி சுழன்றிடுமால்” — கலிங்கத்துப் பரணி பழைய காலங்களில் யுத்த வாகனமாகத் தேரை உபயோகப்படுத்தினார்கள். பெரும் வீரர்கள் பலவிதப்படைக்கலங்களுடன் தேரின் மீது வீற்றிருந்து போர் செய்யும் மரபு இருந்தது. மகாபாரதத்தில் “அதிரதர்கள், மகாரதர்கள் ” என்றவாறு தேரைக்குறிப்பிட்டே படைத்தலைவர்களை ஒழுங்கு படுத்தி இருக்கிறார்கள். போரில் வெற்றியடைவதற்குத் தேர்ச்சாரதிகளும் மிகவும் முக்கியம் என்று உணர்ந்தே… மேலும் »

கருத்திடுக

திருப்புகழ் அர்த்தங்கள்-I

நேற்றுக் ‘காவியத்தலைவன்’ படத்தில் ஒரு காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன் (கீழே). அதில் திருப்புகழில் உள்ள ஆழ்ந்த அர்த்தங்களை விளக்கும் சிவதாஸ் சுவாமிகள் என்ற நாடக வித்தகர் (சங்கரதாஸ் சுவாமிகள் என்ற நிஜ வித்தகரின் தழுவல்?) , “நுனிப்புல் மேயாதீர்கள்” என்று தன் சீடர்களைப் பேசுவார். இது, சின்ன வயதில் என் பாட்டனார் சிவத்திரு. சிவசுப்பிரமணியம் ஐயா அவர்கள் எனக்குச் சொன்ன ஆழமான விளக்கங்களை நினைவூட்டியது. உதாரணம்: “அதல சேடனாராட”என்ற பாடல். இந்த… மேலும் »

கருத்திடுக