மேகதூதம்

மேகதூதம் என்ற பெருநூலில் இருந்து நான்கு கவித்துளிகள் சாயையில் மடமயில் ஆயினை; தனிநெடுங்கானில்ஓசையில் திடுக்கிடும் கன்னி மான் மருள்விழி உடையாய்;பூங்கொடி போலவே துவள்கிற உடலினை; ஆங்கேபாங்குறு மதிமுகம் படைத்தனை; பொய்ச்சினம் காட்டும்வாங்கிய வரிசிலைப் புருவங்கள் இரண்டினை வளைத்தாய். வெள்ளிப் பனி இமயத்தினில் வீசிடும் காற்றுஅள்ளிக்கொணர்ந்தது தென்திசை நோக்கி, என் அன்பே,மெள்ள முளைவிடும் தேவ தருத் தளிர் வாசம்!கிள்ளைச் சிறுமொழிக் கள்ளி, உன் மேனிச் சுகந்தம்மெல்ல முகர்ந்து, நான் அள்ளி அணைத்திட… மேலும் »

கருத்திடுக

இராமேசன்

நாடுபல நடந்த முதியோன் ஒருவன் தாடியை வருடிச் சொன்னான் ஒருநாள்:“வேட்டைப் பருந்து நிழலைத் துரத்தும் காட்டுப் பாலைக் கானல் வெளியில் கால்கள் இரண்டு கண்டேன்: அவையோசாலப் பெரிய: கல்லிற் செதுக்கி, உடலோ எதுவும் இணைக்கப்பெறாது, நெடிதே நின்றன தனியே: அவற்றின் பக்கம் தனிலே, பாதி மணலில் சிக்கிப் புதைந்து, சிதறிய தலையொன்று இருந்தது ஆங்கே. இதன்மேல் சிற்பி வருந்திச் செதுக்கிய வண்மையால், ஒருவன் அகந்தை முகமும், ஆணவச் சிரிப்பும்,மிகுந்த செருக்கில் விடைத்ததோர் வாயும்,ஆணையிட்டு உலகை ஆள்கிற நோக்கும் காணுதல் முடியும் இன்றும்; கல்லிற்  செதுக்கியதாயினும், சிற்பியின் திறமை மிதப்புடை… மேலும் »

கருத்திடுக

“செஜாரா மலாயு” வில் ராஜேந்திர சோழன் பற்றிய வர்ணனை – I

“செஜாரா மலாயு” மலாய ராஜவம்சத்தின் சரித்திரத்தைக் கூறுகிற ஒரு மலாய் மொழியிலான கிரந்தமாகும். இது கிட்டத்தட்ட சிங்கள ராஜவம்ச சரித்திரத்தைக்கூறுகின்ற “மகாவம்சத்தை” ஒத்தது. ஆனால், மகாவம்சத்தை விட இதில் புழுகுகளும் அறிவுக்கு ஒப்பாத செய்திகளும் இன்னும் அதிகம். முன்னூறு வருடம் அரசாளுகின்ற அரசர்களையும், வானத்தில் பறக்கும் குதிரைகளையும் பற்றி இதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே இது ஒரு வரலாற்று நூல் என்பதை விட ஓர் இதிகாசம் என்பது அதிகம் பொருந்தும். ஆனால்,… மேலும் »

1 கருத்து

ஓய்வு நிலைப் பயணி

சாளரத் தருகே இருந்து நானும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். கடந்து வந்த பாதைகள் பற்றி பாதையில் போன மனிதர்கள் பற்றி பள்ளங்கள் மேடுகள் குழிகளைப் பற்றி பயந்ததும் விழுந்ததும் எழுந்ததும் பற்றி… புல்வெளிச் சிரித்த பூக்கள் பற்றி பூக்கள் அலைத்த காற்றைப் பற்றி இளங் காலைப் பனி மூட்டத்தின் நடுவே எழுந்து வந்த சூரியன் பற்றி வடமேல் திசை, ஒரு சிற்றூர் கரையில் மூங்கில் மரத்துப் பாலத்தின் கீழ் கடப்பம் பூக்களை… மேலும் »

கருத்திடுக

நாடும் காடும் அல்லது தாம்பத்தியம்

அவனும் அவளும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். வேடன் அவன். விவசாயியின் மகள் அவள். அவர்கள்வாழ்வது எங்கே? இயற்கையோடு இணைந்த காட்டு வாழ்க்கையை நேசிக்கிறான் அவன். உழைப்பினால்உலகை மாற்றும் நாட்டு வாழ்க்கையை யாசிக்கிறாள் அவள். விளைவோடு ஒன்றிணைய விரும்புகிறான்அவன். விளைவிக்க விரும்புகிறாள் அவள். வசந்தம் அவன்: வசந்த காலம் வந்த போது மரங்கள் பூத்தன. வனத்தில் வாழும் பறவை யாவும் பாடிக் களித்தன. அசைந்து செல்லும் ஓடை நீரின் அழகைப் பாரடீ!… மேலும் »

கருத்திடுக

யாதும் ஊரே 

To us, all towns are as our hometown. All people are as brethren. Life’s good comes not from others’ deeds, nor ill. To suffer, and to experience bliss, is up to each person and their own deeds alone. Even death is not to be feared, for it is a form… மேலும் »

கருத்திடுக