இராமேசன்

நாடுபல நடந்த முதியோன் ஒருவன் தாடியை வருடிச் சொன்னான் ஒருநாள்:“வேட்டைப் பருந்து நிழலைத் துரத்தும் காட்டுப் பாலைக் கானல் வெளியில் கால்கள் இரண்டு கண்டேன்: அவையோசாலப் பெரிய: கல்லிற் செதுக்கி, உடலோ எதுவும் இணைக்கப்பெறாது, நெடிதே நின்றன தனியே: அவற்றின் பக்கம் தனிலே, பாதி மணலில் சிக்கிப் புதைந்து, சிதறிய தலையொன்று இருந்தது ஆங்கே. இதன்மேல் சிற்பி வருந்திச் செதுக்கிய வண்மையால், ஒருவன் அகந்தை முகமும், ஆணவச் சிரிப்பும்,மிகுந்த செருக்கில் விடைத்ததோர் வாயும்,ஆணையிட்டு உலகை ஆள்கிற நோக்கும் காணுதல் முடியும் இன்றும்; கல்லிற்  செதுக்கியதாயினும், சிற்பியின் திறமை மிதப்புடை… மேலும் »

கருத்திடுக

சோழ சாம்ராஜ்யம்: சூரியன் மறைந்தது!

சோழ சாம்ராஜ்யம்: சூரியன் மறைந்தது! சோழ அரச வம்சத்தினர் சூரிய வம்சத்தினர் என்று தங்களைச் சொல்லிக்கொண்டவர்கள். சோழ மரபிலே “ஆதித்தன்” என்ற பெயர்கொண்ட மூவர் இருந்தார்கள். மூவருமே இணையில்லாத வீரர்கள். ஒருவர் (ஆதித்த சோழர்) அரசாக இருந்த சோழ ராஜ்யத்தைப் பேரரசாக ஆக்கிய பிறகு இயற்கை மரணம் எய்தினார். இன்னொருவர் (இராஜாதித்யர்), பேரரசாக வந்துவிட்ட சோழ சாம்ராஜ்யத்தைப் பெரும் பேரரசு ஆக்கும் தருவாயில் போர்க்களத்தில் வீழ்ந்தார். மூன்றாமவர் (ஆதித்த கரிகாலர்)… மேலும் »

கருத்திடுக

வாசகர்களுக்கு ஒரு ‘கதை’

வாசகர்களுக்கு ஒரு ‘கதை’ சொல்லப் போகிறேன். முதலாம் பராக்கிரமபாகுவின் யாழ்ப்பாண ஆக்கிரமிப்புப் பற்றிய ஒரு ‘கதை’. இது உண்மையில் கதையல்ல. வரலாற்றில் இப்படித்தான் நடந்திருக்கும் என்று மேற்கொள்ளப்படுகின்ற ஒரு கற்றறிந்த ஊகங்களின் தொடர் (series of educated guesses). இதை நான் ‘கதை’ என்று அழைப்பதற்குக்காரணம் இதுதான். இந்தக் ‘கதை’ யானது ஏற்கெனெவே நான் எழுதியிருக்கும் பல பதிவுகளின் அடிப்படையிலானது. என்னுடைய ஊகங்களுக்கான காரணங்களை அந்தப்பதிவுகளில் விரிவாகக் கூறியிருக்கிறேன். மறுபடியும்… மேலும் »

1 கருத்து

‘வெளிநாடு’ என்னும் வேலை

‘வெளிநாடு’ என்னும் வேலை (புலப்பெயர்வு பற்றியும் புலம்பெயர் தமிழர்கள் பற்றியும் தாயகத்தில் இருக்கும் பார்வை குறித்தான ஒரு சிறு விமர்சனம்) “திரு சின்னத்தம்பி கந்தையா காலமானார். அன்னார் காலஞ்சென்ற தையல்நாயகியின் அன்புக்கணவரும், ஜெகன் (நீர்ப்பாசனத் திணைக்களம் வவுனியா), குகன் (ஆசிரியர் யா/விக்னேஸ்வர வித்தியாசாலை, துன்னாலை), வரதன் (ஜேர்மன்), குணாளன் (லண்டன்), விஜயன் (சுவிஸ்), பாமா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஈஸ்வரி, Dr. பாமினி, கனகா (ஜேர்மன்), மணிமேகலை (லண்டன்),… மேலும் »

கருத்திடுக

கவிராட்சசன்

    சோழர் காலமென்பது பலவகைகளில் தமிழர்களின் பொற்காலமென்பதை அறிந்திருப்பீர்கள். அதாவது  படைத்துறை, பூகோள  அரசியல்,  ராஜதந்திரம்,  கடலாதிக்கம்,  வெளிநாட்டு வர்த்தகம்,  கட்டடக்கலை, லலித  கலைகள், தமிழ் இலக்கியம் இவையெல்லாவற்றுக்குமே ஒரு பொற்காலம் அது.  பொதுவாக, ஒரு பேரரசின் இலக்கிய / கலைத்துறைப்  பொற்காலமானது அதனுடைய படைத்துறைப் பொற்காலத்திற்குச் சற்றுப் பிற்பட்டே  அமையும். அதாவது, போர்களில்  வெற்றிபெற்று, எல்லைகளை  விஸ்தரித்து, வெளிநாடுகளில் இருந்து செல்வங்களைக் கொண்டுவந்து குவித்து, மக்கள் யாவரும்… மேலும் »

கருத்திடுக

சோழர்களின் போர்க்குற்றங்களும் பெண்களுக்கெதிரான வன்முறைகளும்: ஒரு சுருக்கக் குறிப்பு.

தலைப்பைப் பார்த்ததுமே பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். “வலியார்முன் தன்னை நினைக்க: தான் தன்னில் மெலியார்மேற் செல்லும் இடத்து.” என்பது வள்ளுவர் வாக்கு. காலச்சக்கரம் சுழல்கிறது. ஒருகாலத்தில் சோழர்கள் வலியவர்களாக இருந்தார்கள். தங்களிலும் மெலியவர்களை, குறிப்பாக எதிரிநாட்டுப் பெண்களை அவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதை நாங்கள் தெரிந்துகொள்வது அவசியம். சோழர்களைப்பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. அவர்களது படைத்துறைச் சாதனைகள் பிரமிக்கத்தக்கவை. அவர்களது தந்திரோபாய நகர்வுகள் உச்சமானவை. அவர்களது கட்டிடக்கலை உலகை இன்றும்… மேலும் »

2 கருத்துக்கள்

“தேற்றம்”  அமைப்பு நடாத்திய “பாதுகாப்பான இணையப் பாவனை: ஒரு வழிகாட்டல் செயலமர்வு” – ஒரு கண்ணோட்டம் 

“தேற்றம்”  அமைப்பு நடாத்திய “பாதுகாப்பான இணையப் பாவனை: ஒரு வழிகாட்டல் செயலமர்வு” – ஒரு கண்ணோட்டம்    “தேற்றம்”  அமைப்பு வழங்கிய “பாதுகாப்பான இணையப் பாவனை: ஒரு வழிகாட்டல் செயலமர்வு”  என்னும் அறிவியல் கருத்தரங்கு 13.10.2018 சனிக்கிழமை மாலை 4.30 – 7.30 மணிவரை சிட்னி பெண்டில்ஹில்  பகுதியில்  அமைந்துள்ள யாழ் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது.    “மெய்ப்பொருள் காண்” எனும் மகுட  வாக்கியத்துடன், அறிவியல் கருத்துக்களைத் தமிழரிடம், தமிழ்… மேலும் »

கருத்திடுக

யாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்?

உக்கிரசிங்கன் யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் மிக முக்கியமான ஒருவன். என்னுடைய மாருதப்புரவீகவல்லி பற்றிய பதிவில் ஏற்கனவே உக்கிரசிங்கனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். இவன் மாருதப்புரவீகவல்லியின் கணவன் என்று கர்ணபரம்பரைக்கதைகள் கூறுகின்றன. உக்கிரசிங்கன் கிபி 795 இல் “வடதிசையில் இருந்து பெருந்தொகையான சேனைகளைக் கொண்டுவந்து போராடி இலங்கையில் அரைவாசி வரைக்கும் பிடித்து ஆண்டுவந்தான். தென்னிலங்கையை வேறு அரசன் ஆண்டு வந்தான்” என்று யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது. ஆனால், உக்கிரசிங்கன் காலத்தில் கருணாகரத்தொண்டைமான் யாழ்ப்பாணம் வந்ததாலும்,… மேலும் »

கருத்திடுக

அதிராஜேந்திரன் மரணம்: கிபி 1070 இல் சோழநாட்டில் என்ன நடந்தது?

கிபி 1070 இல் சோழநாட்டில் என்ன நடந்தது? சோழ சாம்ராஜ்யத்தின் மேல் மட்டத்திற்குக் கீழே உறங்கிக்கொண்டிருந்த தீய சக்தி ஒன்று 1070 ஆம் ஆண்டில் மேலே வந்தது. 1070 க்கு முற்பட்ட பல தசாப்தங்களுக்கு, சோழ சாம்ராஜ்யத்தில் மேம்போக்காகப் பார்த்தால் எல்லாமே நன்றாயிருந்தது. சோழப்படைகள் கங்கையையும், கடாரத்தையும் கைப்பற்றி, இன்னும் முந்நீர்ப்பழந்தீவு பன்னிரண்டாயிரத்தையும், ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தையும், சாவகத்தையும் பிடித்து, பிலிப்பைன் தீவுவரை சென்று, தமிழர்களுக்கு இணையில்லாப் பெருமையை அளித்தன. இந்திய… மேலும் »

கருத்திடுக

சோழர்களின் இரண்டாவது ‘கடாரப்’ படையெடுப்பு: கிபி 1068

சோழர்களின் கடாரப்படையெடுப்பு எனும்போது எல்லோருக்கும் நினைவு வருவது ராஜேந்திர சோழனின் ஸ்ரீவிஜயம் மீதான படையெடுப்பு. இது கிபி 1025 அளவில் நடந்தது. இதில் ராஜேந்திர சோழன் கைப்பற்றிய இடங்கள் பற்றி அவனது மெய்க்கீர்த்தி விரிவாகக் குறிப்பிடுவதாலும், வேறுபல இந்தோனேசிய, மலேசிய, சீன வரலாற்று மூலங்களாலும், ஆய்வுகளாலும் இந்தப்படையெடுப்பு குறித்த விபரங்கள் கிடைக்கின்றன. இதுபோலல்லாமல், வீர ராஜேந்திர சோழனின் (இவர் ராஜேந்திர சோழனின் மூன்றாவது மகன்) காலத்தில் நடந்த இரண்டாவது ‘கடாரப்’… மேலும் »

3 கருத்துக்கள்