தெல்லிப்பழையா? தெல்லிப்பளையா?

தெல்லிப்பழையா? தெல்லிப்பளையா? யாழ்ப்பாணத்திலும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் அமைந்துள்ள பல இடங்களுக்குப் “பழை” அல்லது “பளை” என்று முடிகிற இடப்பெயர்கள் உண்டு. தெல்லிப்பழை, பளை, புலோப்பளை, வற்றாப்பளை, அல்லிப்பளை, வரத்துப் பளை, தும்பளை இப்படி. இவற்றில் தெல்லிப்பழையும் வற்றாப்பளையும் பிரசித்தமானவை. தெல்லிப்பழை, துர்க்கை அம்மன் ஆலயம், யூனியன் கல்லூரி, மகாஜனக் கல்லூரி முதலிய நிறுவனங்களாலும், அவ்வூரில் அமைந்துள்ள முக்கியமான வீதிச்சந்திப்பினாலும், பலாலி விமான நிலையத்துக்கும் காங்கேசன்துறைத் துறைமுகத்துக்கும் போகும் பாதையில் அமைந்த… மேலும் »

கருத்திடுக

எழுபதில் திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்கள்: மாணவர் மனங்களிலிருந்து

The books, speeches and interviews of Mrs. Kohila Mahendran are available from her website.

2 கருத்துக்கள்

கொரோனா, கோவிட் (COVID-19): ஒரு ஆழமான அறிமுகமும் ஐயம் தீர்த்தலும்.

தேற்றம் “மெய்ப்பொருள் காண்” அமைப்பு வழங்கிவரும் அறிவியல் கருத்தரங்குத் தொடர் வரிசையில், ஒரு இணையவழி நிகழ்வாக (ONLINE EVENT) “கொரோனா, கோவிட் (COVID-19): ஒரு ஆழமான அறிமுகமும் ஐயம் தீர்த்தலும்” எனும் நிகழ்வு கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி ஞாற்றுக்கிழமை நடந்தேறியது. காலத்தின் தேவை கருதி, தமிழ் அமைப்பு ஒன்றினால், zoom செயலியைப் பாவித்து நடத்தப்பட்ட முதலாவது கருத்தரங்கு இதுவாக இருக்கலாம். புதிய தொழில் நுட்ப்பமொன்றைப் பாவிப்பதில் பார்வையாளர்களுக்கு… மேலும் »

கருத்திடுக

கலிங்க மாகன் யார்? — ஒரு மீள்பார்வை

“இலங்கைவாசிகள் செய்துவந்த தீச்செயல்களின் அளவு மிகவும் அதிகரித்ததன் பயனாக, இந்நாட்டைக் காவல் செய்துவந்த தேவதைகள் தமது கடமையினின்றும் நீங்கின. பொய்ச்சமயம் ஒன்றில் நிலைத்த நெஞ்சையுடையவனும், நல்வினைகளாகிய காட்டுக்கு ஒரு காட்டுத்தீ போன்றவனும், கொடுங்கோல் அரசில் இன்புறுகின்றவனுமாகிய ஒருவன் வந்து இறங்கினான்.” – சூளவம்சம் கலிங்க மாகன் யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் மிக முக்கியமான, அதேநேரம் மிக மர்மமான பாத்திரம். அவனது பெயரைப் பெரும்பாலோர் கேள்விப்பட்டிருப்பார்கள். அதேநேரம் அவன் யாரென்று முழுதாக அறிவது… மேலும் »

கருத்திடுக

நோய்ப்பரவலியல் துறையின் முக்கியமான சொல்லாட்சிகள்: ஒரு விளக்கக் குறிப்பு

கொரோனா வைரஸின் பரவலானது உலகெங்கிலும் முக்கியமான பேசுபொருளாக மாறிவிட்ட இந்த வேளையிலே, நோய்ப்பரவலியல், கணித நோய்ப்பரவலியல், கணனி நோய்ப்பரவலியல் ஆகிய துறைகளில் பாவிக்கப்பட்டு வந்த பல கலைச்சொற்களும் சொற்றொடர்களும் இன்று பொதுவெளியில் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. உதாரணம் தொற்றாறு (transmission rate), தேறாறு (recovery rate), அடிப்படைப் பெருக்க இலக்கம் (Basic Reproduction Number), சமூகத் தூரமாக்கல் (Social distancing), மந்தை நோயெதிர்ப்பு (Herd immunity). ஆனால், இந்த சொற்கள் மற்றும்… மேலும் »

கருத்திடுக

மானிப்பாய் மதவடி

மானிப்பாய் மதவடி (திருக்குறளின் சில அதிகாரங்களுக்கு இப்படியும் ஒரு உரை ) மானிப்பாய் மதவடி – I — விழிமைந்தன் — இது நடந்தது சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு. மானிப்பாய்க் கிராமத்தின் ஒழுங்கையிலுள்ள மதவொன்றில் நானும் நண்பனும் அமர்ந்து, கால்களை ஆட்டிக்கொண்டு போகிற வருகிறவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது நான் ரொம்பவும் அப்பாவி. புத்தகப் படிப்பின்றி வேறொன்றைப்பற்றியும் பெரிதாகத் தெரியாது (இப்பவும் கிட்டத்தட்ட அப்பிடித் தான்!) நண்பன் அப்படியல்ல. படிப்பிலும்… மேலும் »

3 கருத்துக்கள்

“நாங்கள் சரியான பிஸி!”

“எவனுமே தனித்தீவு அல்லன்” “No man is an island ” — John Donne. இன்றைக்குத் தமிழர் மத்தியில் பொதுவாகவும், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குறிப்பாகவும் மிக வேகமாகப் பரவிவரும் தோற்று நோய் ஒன்று உண்டு. அதுதான் “பிஸி” யாக இருப்பது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், “பிஸி” யாக இருப்பதாக அடிக்கடி சொல்லிக் கொள்வது. நீர்வெறுப்பு நோய் வந்தவர்கள் நாய் மாதிரிக் குரைப்பது போல, “பிஸி” நோய் தொற்றியவர்கள்… மேலும் »

கருத்திடுக

ஆசிரிய வாண்மை

அம்புவியில் மாணவர்கள் வென்றி பெறக்காரணமே ஆசிரிய வாண்மை என்று சொல்லு – அவர் அடிபணிந்து வாழ்த்துக்கூறி நில்லு – பிள்ளை வெம்பி நிற்கும் வேளையிலே அன்பு மிகக் கொண்டணைத்து வெற்றி பெறச் செய்யும் நல்ல ஆசான் – அவன் விரட்டுவது துன்பம் என்னும் மாசாம். நாளைய சமூகத்தினர் வாழ வழி செய்திடுவோர் நல்ல ஆசிரியர் என்பதுண்மை – அவர் நாட்டுவது பிள்ளை உள வண்மை – வரும் காலம் ஒளி… மேலும் »

கருத்திடுக

ஆநிரை கவர்தல்: தமிழர்களின் பண்பாடா?

இன்னுமொரு தலைப்பு: அவுட்-ஒஃ ப்- ஆபிரிக்காகவும், ஆரியரும், ஆநிரையும் ஆநிரை கவர்தல் என்றால் என்ன என்பதையே பலர் அறியாமல் இருக்கலாம். எதிரிகளுக்குச் சொந்தமான கால்நடைகளைப் பலவந்தமாக ஓட்டிக்கொண்டு வருவதையே அல்லது கைப்பற்றி வைத்திருப்பதையே ஆநிரை கவர்தல் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. எதிரிகள் தமக்குச் சொந்தமான கால்நடைகளைத் திரும்பப் பெறவே பார்ப்பார்களாதலால் இரு தரப்புக்கும் போர் மூளும். எனவே ஆநிரை கவர்தலென்பது ஒரு வன்னடவடிக்கை (aggressive act) அல்லது போருக்கு… மேலும் »

1 கருத்து

தமிழ் பௌத்தம்

தமிழ் பௌத்தம்: இது ஒரு மிகப்பெரிய விடயப் பரப்பு. உண்மையிலே, தமிழுக்கும் அல்லது தமிழருக்கும் பௌத்தத்துக்கும் உள்ள தொடர்பைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இவ்விடயத்தைப்பற்றி என்னைவிட அதிகம் அறிந்த பல அறிஞர்கள் நூல்களும் நீண்ட கட்டுரைகளும் எழுதியுள்ளனர். ஆகவே என்னுடைய இந்தக்கட்டுரையின் நோக்கம் புதிய விடயங்களை வெளிக்கொண்டு வருவதோ ஊகிப்பதோ அல்ல. அப்படியானால் ஏன் இதை எழுதுகிறேன் என்று கேள்வி எழலாம். இதற்குப்பதில் என்னவெனில், இன்றைக்குத் தமிழர்களில் பலருக்கு, ஒருகாலத்தில்… மேலும் »

1 கருத்து