நூல்கள்

விழிமைந்தனின் நூல்கள்

‘ஏலியன் கதைகள்’ அல்லது ‘ கவிவிதை’ நூல்களை மின்வடிவில் வாங்கி வாசிக்க விரும்புபவர்கள் இங்கே வாங்க முடியும். மின்னூல் ஒன்றின் விலை இலங்கையில் இலங்கை ரூபா 300/= உம் (அமெரிக்க டாலர் 2/= ) இலங்கைக்கு வெளியே அமெரிக்க டாலர் 10/= உம் ஆகும். ஒரு மின்னூலை வாங்குபவர்களுக்கு மற்றைய மின்னூல் இலவசம். ஒருமுறை செலுத்தியவர்கள் மறுபடி ஐம்பது வருடங்களுக்கு பணம் செலுத்தத் தேவையில்லை. அதாவது மேற்குறிப்பிட்ட தொகை ‘ வாழ்நாள் சந்தா’ போன்றதாகும். தற்காலத்தில் பல வாசகர்கள் மின்வடிவிலேயே ( கணனியில்) வாசிக்க விரும்புவதால் புத்தக விற்பனையில் இந்தப் புது முறையை அறிமுகம் செய்கிறது piraveenan.lk

மின்நூல்களை வாங்க விரும்புபவர்கள் piraveenan.lk யில் கணக்கொன்றைத் திறப்பது அவசியமானதற்கும். இது மிகவும் இலகுவானது. “உங்கள் கணக்கு” என்ற பகுதிக்குச் சென்று உங்கள் பெயர் விபரம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் கொடுத்துக் கணக்கு ஒன்றைத் திறந்து கொள்ளலாம். அதன் பின் நீங்கள் Paypal என்ற  பணச்ப்செலுத்துகை சேவையினை பாவித்து உங்கள் வாழ்நாள் சந்தாவைச் (ஐம்பது வருடங்கள்) செலுத்தலாம். Paypal கணக்கு இல்லாதவர்கள் www.paypal.com என்ற இணைய முகவரிக்குச் சென்று உங்கள் கடனட்டை விபரங்களைக் கொடுத்து Paypal கணக்கு ஒன்றைத் திறந்து கொள்ளலாம். Paypal கணக்கைத் திறந்தபின் piraveenan.lk இற்கான சந்தா செலுத்துவதற்கு மட்டுமின்றி இணையத்தில் வேறு எந்த பொருட்கள், சேவைகளை வாங்குவதற்கும் Paypal கணக்கை நீங்கள் பாவிக்கலாம். இது மிகவும் பாதுகாப்பானதும் இலகுவானதும் ஆகும். நீங்கள் எங்களுக்கு (அதாவது piraveenan.lk இணையத் தளத்திற்கு) உங்கள் கடனட்டை விபரங்களைத் தரத் தேவையில்லை.

அச்சுவடிவில் புத்தகங்களை வாங்க விரும்புபவர்கள் ஆசிரியருடன் தொடர்பு கொள்க . அச்சுவடிவில் நூல் ஒன்றில் விலை இலங்கையில் ரூபா 400/= உம் இலங்கைக்கு வெளியே USD 15 உம் ஆகும். தபாலில் அனுப்புவதாயின் தபால் செலவுகள் தனி.

பதிவு செய்வது எவ்வாறு?

இணையத்தில் நீங்களாக பதிவு செய்வதாயின் இந்த இணைப்பில் பதிவு செய்து கொள்க. இதன்போது உங்களுக்கு ஒரு நுழைவுச்சொல்லும் கடவுச்சொல்லும் கிடைக்கும்

http://www.piraveenan.lk/register

உங்களுக்குரிய சந்தாவை பெறுவது எப்படி?

பதிவு செய்த உறுப்பினர்களே சந்தாவை பெற முடியும் . பதிவு செய்தபின் கீழ் வரும் இணைப்பில் சென்று உங்களுக்குரிய சந்தா வகையினை தெரிவு செய்து அதற்குரிய கட்டணத்தை பாதுகாப்பான முறையில் Paypal உதவியுடன் உங்கள் கடனட்டை அல்லது வரவு அட்டையின் மூலமாக செலுத்திக் கொள்ள முடியும்

http://www.piraveenan.lk/subscriptions/

உங்களுக்கு Paypal கணக்கொன்று இல்லையாயின் நீங்கள் பணம் செலுத்திடும்போது Paypal கணக்கொன்றைத் திறக்க முடியும். இதற்கு உங்களது சரியான முகவரியைத் தெரிவிப்பது முக்கியமாகும். நீங்கள் இலங்கையில் வசிப்பவராயின் உங்களது Postcode எண் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். பின்வரும் இணையத்தளத்தில் இலங்கையின் பொதுவான Postcode எண்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

https://worldpostalcode.com/sri-lanka/

 

சில Postcode எண்கள்:

Wellawatte                      00600

Dehiwala                          10350

Bampalapitiya                 00400

Colpetty                            00300

Jaffna                                40000

Batticaloa                         30000

கட்டணம் செலுத்துவதில் அல்லது பதிவு செய்வதில் உதவி தேவைப்படின் piraveenan.lk இணையத்தள நிர்வாகியுடன் தொடர்பு கொள்ளவும்