திருப்புகழ் அர்த்தங்கள்-II

‘கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது கனக வேத கோடூதி’ என்றால் என்ன? காலி என்றால் பசு. இப்போது கூட நம்மூரில் ‘ கன்று காலிகள்’ என்று சொல்வதுண்டு. “கதறிச் சென்ற பசுக்கள் மீண்டுவரக் (குழலை ஊதியவரும்), அர்ச்சுனன் ஏறிய தேரின் பாகனாயிருந்து, தங்க மயமானதும், வேத ஒலியைத் தரும் சங்கை ஊதியவரும்,” என்று உரைசொல்லுகிறார்கள். சரியா? பாரதப்போரில், அபிமன்யு வீழ்ந்ததும், புத்திர சோகம் தாங்காத அர்ச்சுனன் ‘நாளைப்… மேலும் »

கருத்திடுக

திருப்புகழில் அர்த்தங்கள்-III

இந்தத் திருப்புகழில் மேலும் பல கதைகள் அடங்கி நிற்கின்றன. அவற்றில் ஒன்று, “அவளோடு அன்று அதிர வீசி வாதாடும்” என்ற வரியில் உள்ள கதை. தில்லை அம்பலத்தில் கோயில் கொண்டு நடனம் ஆடுவது யார் என்பதில் சிவனுக்கும் காளிக்கும் போட்டி ஏற்பட்டதாம். இருவரும் போட்டிக்கு நடனம் ஆடுகின்றனர். சிவன் பல புதுமையான நடனக்கோலங்கள் காட்டுகிறார். காளியும் சளைக்காமல் அவை ஒவ்வொன்றையும் பிரதி செய்கிறாள். ( முதல் வரியில் ‘அபின காளி… மேலும் »

கருத்திடுக

திருப்புகழில் அர்த்தங்கள் – IV

அதிகப் பிரபலமில்லாத ஆனால் அருமையான ஒரு திருப்புகழ் ‘கன்றிலுறு மானை’. தருமபுரம் ஸ்வாமிநாதன் அவர்கள் அழகாகப்பாடியிருக்கிறார். கன்றிலுறு மானை வென்றவிழி யாலே கஞ்சமுகை மேவு முலையாலே கங்குல்செறி கேச மங்குல்குலை யாமை கந்தமலர் சூடு மதனாலே நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி நம்பவிடு மாதருடனாடி நஞ்சுபுசி தேரை யங்கமது வாக நைந்துவிடு வேனை யருள்பாராய் குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி கொண்டபடம் வீசு மணிகூர்வாய் கொண்டமயி லேறி அன்றசுரர் சேனை… மேலும் »

கருத்திடுக

கலிங்க மாகனும் யாழ்ப்பாணமும் – III

இவ்விடயம் பற்றிய மேலும் சில அவதானங்கள் பழைய கால அரசர்களுக்கிடையிலான யுத்தங்கள் இனமோதல்கள் என்பதை விட, வம்ச மோதல்கள், அரசர்களுக்கிடையிலான தனிப்பட்ட மோதல்கள், மத மோதல்கள் என்ற பல பரிமாணங்கள் உடையவை. இன்றைய தேசிய உணர்வாளர்கள் (எல்லா இனத்திலும் தான்) இந்த உண்மைகளை ஒத்துக்கொள்ளத் தயங்கவே செய்வர். சில உதாரணங்கள்: – மகா பராக்கிரமபாகு பாண்டியநாட்டில் தலையிட்டதற்குக்காரணம் அவன் தாய் பாண்டியத் தமிழச்சி. எனவே அவன் அரைத் தமிழன். இதுபோக… மேலும் »

கருத்திடுக

கலிங்க மாகனும் யாழ்ப்பாணமும் – II

கலிங்க மாகனைப் பற்றி மேலும் கிண்டியபோது பல சுவையான விபரங்கள் கிடைத்தன. அவற்றில் சில: – கலிங்க நாட்டைப் பன்னிரண்டாம், பதின்மூன்றாம், பதினாலாம் நூற்றாண்டுகளில் ஆட்சிசெய்தவர்கள் ‘சோழகங்க’ வம்சத்தினர். கங்க வம்சம், சோழ வம்சம் என்பவற்றின் தோன்றல்கள் என்பதால் இந்தப்பெயர். பெயருக்கேற்றபடி இவர்கள் சோழ வம்சத்தினருடன் பெண் கொடுத்துப் பெண் வாங்கியிருந்தனர். கலிங்கத்துப்பரணியில் வில்லனாய் அமையும் அனந்தவர்மன் கூட வீர ராஜேந்திரரின் பேரன் தான்! இவனைத்தான் முதலாம் குலோத்துங்கன் (இவனும்… மேலும் »

கருத்திடுக

கலிங்க மாகனும் யாழ்ப்பாணமும் – I

“இலங்கைவாசிகள் செய்துவந்த தீச்செயல்களின் அளவு மிகவும் அதிகரித்ததன் பயனாக, இந்நாட்டைக் காவல் செய்துவந்த தேவதைகள் தமது கடமையினின்றும் நீங்கின. பொய்ச்சமயம் ஒன்றில் நிலைத்த நெஞ்சையுடையவனும், நல்வினைகளாகிய காட்டுக்கு ஒரு காட்டுத்தீ போன்றவனும், கொடுங்கோல் அரசில் இன்புறுகின்றவனுமாகிய ஒருவன் வந்து இறங்கினான்.” – சூளவம்சம் சாதாரணமாக மிகவும் சுருக்கமாகவும் உணர்ச்சியின்றியும் வரலாற்றை (தங்கள் பார்வையில்) நடந்தது நடந்தபடி வர்ணித்துச் செல்வதாகிய சூளவம்சம், மேற்கூறிய விஸ்தாரமான வர்ணனையுடன் கலிங்க மாகனை அறிமுகம் செய்கிறது.… மேலும் »

கருத்திடுக

ஆண்டாள் – III

ஆண்டாளின் திருப்பாவை வரியொன்றில் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்று இருப்பதை வைத்துக்கொண்டு ஆண்டாளின் காலத்தைக் கணித்திருப்பதாகச் சொல்கிறார்கள். வைரமுத்துவும் தன் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் (ஆமாம், அவர் கட்டுரையில் ‘அந்த’ ஒரு சொல்லைத் தவிர வேறு விஷயங்களும் இருக்கின்றன…. ஹி ஹி ). இதைப்பற்றிக் கடந்த வாரம் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன் (முன்னைய பதிவுகள் இரண்டும் வானியல் விளக்கப்படமும் காண்க). யோசிக்க யோசிக்க, இந்தக் ‘காலக்கணிப்பு’ ஆர்வக்கோளாறினால் துணியப்பட்ட அவசர முடிவென்றே… மேலும் »

கருத்திடுக

ஆண்டாள் II

ஸோ….. “வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று” என்பதற்கு விண்ணியலின்படி அர்த்தம் என்ன? நானே கொஞ்சம் யோசித்துப்பார்த்தேன். கீழே உள்ள படத்தின்படி நடந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அதாவது, வெள்ளி உதிக்கின்ற அதே நேரத்தில் வியாழன் மறைவதற்கு, வெள்ளி, வியாழன், பூமி (குறிப்பாக பூமியில் ஆண்டாளின் இடம்) இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருந்திருக்க வேண்டும். இது கொஞ்சம் அரிதுதான். கொஞ்சம் நீண்ட விளக்கம் தேவையானவர்களுக்கு: சூரியனைச் (Sun) சுற்றும் கிரகங்கள் புதன்… மேலும் »

கருத்திடுக

ஆண்டாள் I

இப்போதெல்லாம் ஆண்டாளைப்பற்றி முகப்புத்தகத்தில் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். காரணம் ஒரு கவிஞரான ஆண்டாளைப்பற்றி இன்னுமொரு கவிஞர் தப்பாகச் சொல்லிவிட்டாராம். அவர் என்ன சொன்னார், சொன்னதின் அர்த்தம் என்ன, அது சரியா தப்பா என்ற ஆராய்ச்சிக்கு நான் போகவில்லை. அது ஒரு தனிநபர் பற்றி இன்னுமொரு தனிநபரின் அபிப்பிராயம் அவ்வளவுதான். விஞ்ஞானம் மற்றும் தமிழில் ஆர்வமுள்ளோருக்கு ஆண்டாளைப்பற்றி இன்னுமொரு சுவையான ஆராய்ச்சி இருக்கிறது. பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம்… மேலும் »

கருத்திடுக

சா வந்த போது…

இன்றைக்கோ நாளைக்கோ என்று ஊசல் ஆடுகிற நண்பனது கால் மாட்டில் நான் அமர்ந்து கொண்டிருந்தேன் ‘என்ன வருத்தம்’ என்று எவருக்கும் சொல்லவில்லை நண்பன்; ‘மெல்பேணில்’ உள்ளோர் நாலுவிதமாய்க் கதைத்தார் ஊரில் இவன்பெரிய உடையார் பரம்பரைதான். போருக்கு அஞ்சிப் புலம்பெயர்ந்து வந்தவன் தான். போகம் உலகிலுள்ளதெல்லாம் அனுபவித்தோன் சாகும் தறுவாயிற் கிடந்தது புலம்புகிறான் ‘சா, எந்தன் கண்ணுக்குச் சமீபத்தில் தெரிகிறது. பாவி நான் வாழ்ந்த வாழ்வின் பயன் என்ன? தாய்நாட்டைக்காக்கத் தம்மைக்… மேலும் »

கருத்திடுக