வாசலுக்கு வந்த வைகறை

(கவியரங்கக் கவிதை: எழுத்தாளர் மாநாடு, மெல்பேர்ன், 2009) உளறிய மொழியை உவந்தவள், நானும் உலகினில் மனிதனாய் உயர மழலையை ரசித்து மடியினில் இருத்தி வளரமுது ஊட்டிய தெய்வம், உலகிலே அன்னை மூன்று எனக்குண்டு. ஒன்று எனைப் பெற்றவள்; தெல்லிப் பழையினில் பள்ளி; பைந் தமிழ் அன்னை; பரவினேன் இவர் இணை அடிகள். கன்னிக் கவிதை ஒரு கள்ளி; அவள் பின்னால் பொன்னே மணியே புதுத் தேனே எனச் சென்றால் சின்னக்… மேலும் »

கருத்திடுக

தண்ணீர் – ஒரு கண்ணீர்க் கதை-I

ஓம் ஓம் ஓம் …… கன்னங்கரேலென்ற காரிருள். எதையும் காண முடியா ஒரு தனிப் பேரிருள். ஊழி தோறும் நின்று வந்த அந்த ஒரு தனிப் பேரிருளை ஊடறுத்து ஒரு தனிப் பேரொலி. ஓம் … ஓம் …. ஓம். ஒரே ஒரு அணு உடைந்து தகர்கிறது. காணும் திசை எங்கும் சக்தி விரிகிறது. சிவத்தில் இருந்து சக்தி. எங்கும் சக்தியின் நடனம். சக்தியில் இருந்து சிவம். எங்கும் சிவம்,… மேலும் »

கருத்திடுக

தண்ணீர் – ஒரு கண்ணீர்க் கதை – II

நானோ தனியே நடந்தேன் – கடல் அழுதல் ஏனோ எனவும் வியந்தேன் நீலமாய்க் கடலும், வெள்ளை நிறத்தினில் அலையும், பச்சைக் கோலமாய்க் கூந்தல் தன்னைக் கோதிடும் தென்னை நாலும், நீளமாய்ச் செல்லும் தண்ட வாளமும் நிறங்கள் கூட்ட, ஓலமாய்க் கடலும் பாடும் ‘ஓம்’ எனும் ஒலியும் கேட்கும். காதல்கள் நிறைய உண்டு கடற்கரை மணலின் மீது. ஆதுர மொழிகள் உண்டு. அலை பாயும் கண்கள் உண்டு. போதில்லாப் போதில் பூத்துப்… மேலும் »

கருத்திடுக

தண்ணீர் – ஒரு கண்ணீர்க் கதை – III

அலை கொண்ட கடல் அன்று துயில் கொண்டதுண்டு அலைகின்ற மென் தென்றல் நிலை கொண்டதுண்டு வலை கொண்டு படகோடு கடல் ஓடுவார்கள் வருகின்ற தறியாது மையல் கொண்டதுண்டு நெடுவானில் உடை வாளோடு அலைவான் ஓர் ஆயன் (Orion) நினைவென்ன கொண்டானோ விரைவில் மறைந்தான் கடி நாயும் அவன் பின்னால் அடி வானம் போகும் தனியாக விடி வெள்ளி நிலவோடு மேயும் விடி காலை வரும் நேரம் கடல் மீது மாற்றம்… மேலும் »

கருத்திடுக

தண்ணீர் – ஒரு கண்ணீர்க் கதை-IV

உயிருக்கு முதல் என்று சொன்னோம் – எங்கள் உயர்வுக்கும் மகிழ்வுக்கும் வழியென்று சொன்னோம் பயிருக்கு வேர் என்று சொன்னோம் – பச்சைப் பழனத்தின் வளர்வுக்கு விசை என்று சொன்னோம் தொழிலுக்கு உரமென்று சொன்னோம் – மின் துரிதத்தில் விளைவிக்கும் முறை ஒன்று கண்டோம் எழிலுக்கு வழி என்று கண்டோம் – பூக்கள் இதமுற்று மலர்தற்கு நீர் வேண்டுமென்றோம் கவிதைக்கு ஊற்றென்று கண்டோம் – நீள் கடல்மேலும் நதிமேலும் பா நூறு… மேலும் »

கருத்திடுக

சிட்னி முருகன் திருப்புகழ்

இருண்ட கோபுரம் படு துகளாகிட ஒளியாகி இசைந்த இன்பமும் துன்பமும் ஒன்றெனும் அறிவாகி மருண்ட நெஞ்சினில் வலி கெட மாமயில் வருவோனே மலை வலஞ்செயு மாநகர் சிட்னியில் உறைவோனே இருந்து சிட்னியில் கலை தொழில் பண மிக உயர்வாகி இலங்குவோர் பலர் தமிழர்கள்; அவரொடு சமமாக வெருண்டு குடிவரும் அகதிகள் வாழவும் அருள்வாயே விலங்கு வேடர்கள் மடந்தை தோள் விழை பெருமாளே

கருத்திடுக

கொடிது கொடிது

உனக்கு வந்தால் ரத்தமா சூக்கி – அம்மா சூக்கி எனக்கு வந்தால் தக்காளி சட்னியா. பெண்ணென்று நாம் உனக்காக அழுதோம் – அம்மா சூக்கி பிறருக்கு அழக் கண்ணீர் இல்லையே உன்னிடம். மனித உரிமை பற்றிப் பேசினாய் – அம்மா சூக்கி மறந்து விட்டாய் கதிரை பெற்றதும். கொடிது கொடிது சாதல் கொடியது – அம்மா சூக்கி அதனில் கொடிது புத்தன் அடியார் கையால் சாவது. அதிலும் கொடிது ஒன்று… மேலும் »

கருத்திடுக

ஓய்வு நிலைப் பயணி

சாளரத் தருகே இருந்து நானும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். கடந்து வந்த பாதைகள் பற்றி பாதையில் போன மனிதர்கள் பற்றி பள்ளங்கள் மேடுகள் குழிகளைப் பற்றி பயந்ததும் விழுந்ததும் எழுந்ததும் பற்றி… புல்வெளிச் சிரித்த பூக்கள் பற்றி பூக்கள் அலைத்த காற்றைப் பற்றி இளங் காலைப் பனி மூட்டத்தின் நடுவே எழுந்து வந்த சூரியன் பற்றி வடமேல் திசை, ஒரு சிற்றூர் கரையில் மூங்கில் மரத்துப் பாலத்தின் கீழ் கடப்பம் பூக்களை… மேலும் »

கருத்திடுக

நாடும் காடும் அல்லது தாம்பத்தியம்

அவனும் அவளும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். வேடன் அவன். விவசாயியின் மகள் அவள். அவர்கள்வாழ்வது எங்கே? இயற்கையோடு இணைந்த காட்டு வாழ்க்கையை நேசிக்கிறான் அவன். உழைப்பினால்உலகை மாற்றும் நாட்டு வாழ்க்கையை யாசிக்கிறாள் அவள். விளைவோடு ஒன்றிணைய விரும்புகிறான்அவன். விளைவிக்க விரும்புகிறாள் அவள். வசந்தம் அவன்: வசந்த காலம் வந்த போது மரங்கள் பூத்தன. வனத்தில் வாழும் பறவை யாவும் பாடிக் களித்தன. அசைந்து செல்லும் ஓடை நீரின் அழகைப் பாரடீ!… மேலும் »

கருத்திடுக

யாதும் ஊரே 

To us, all towns are as our hometown. All people are as brethren. Life’s good comes not from others’ deeds, nor ill. To suffer, and to experience bliss, is up to each person and their own deeds alone. Even death is not to be feared, for it is a form… மேலும் »

கருத்திடுக