கொடிது கொடிது

உனக்கு வந்தால் ரத்தமா சூக்கி – அம்மா சூக்கி
எனக்கு வந்தால் தக்காளி சட்னியா.

பெண்ணென்று நாம் உனக்காக அழுதோம் – அம்மா சூக்கி
பிறருக்கு அழக் கண்ணீர் இல்லையே உன்னிடம்.

மனித உரிமை பற்றிப் பேசினாய் – அம்மா சூக்கி
மறந்து விட்டாய் கதிரை பெற்றதும்.

கொடிது கொடிது சாதல் கொடியது – அம்மா சூக்கி
அதனில் கொடிது புத்தன் அடியார் கையால் சாவது.

அதிலும் கொடிது ஒன்று உள்ளது – அம்மா சூக்கி அது
அமைதி நோபல் பரிசு பெற்றோர் கையால் சாவது.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.