இனியொரு விதி செய்வோம்

இனியொரு விதி செய்வோம் – போர் என்பதோர் வார்த்தை இங்கில்லை என்றே. மனிதரை மனிதர்களே – கொன்று மடிவதுவும், பெண்கள் கதறுவதும் துணி பட உடல் சரியச் – செங் குருதி ஓர் ஆறென ஓடுவதும் இனி எமதுலகில் இல்லை – எங்கும் இன்பமே பொங்குக என்றிசைப்போம் மலைகளின் நடுவினிலே – கதிர் மறைகையிலே, முழு மதியும் வரக் குலவிடும் தென்றலிலே – உளம் குளிர்ந்திட வரும் ஒரு நிறைவு!… மேலும் »

கருத்திடுக

வெற்றி கொண்ட தாய்

சொந்தவூர் வளாகம் அடைந்தனை என்று சொன்ன சொல் காலையிற் கேட்டேன் சிந்தையில் யாரோ தேறலைச் சொரிந்தார் செவியெலாம் இனித்தது அம்மா பண்டுதொட்டு இருந்த இடத்தினில் மீண்டும் பாங்குற மிளிரும் நின் கோலம் கண்டிடத் துடித்தன கண்கள்; நான் வருவேன் காற்றினில் ஏறி, என் தாயே. பன்னிரு வருடம் அலைந்தனை அம்மா பாடுகள் யாவையும் பட்டாய் சின்னதோர் கிடுக்குக் கொட்டிலில் இருந்தாய் சிறியவர் பொறாமையில் வெந்தாய் சன்னதம் கொள்ளும் புயல் மழை… மேலும் »

கருத்திடுக

நதியே நதியே

மாலையிலே மஞ்சள் வெயில் காயும் நேரம். மாநகரில், ‘ரொரன்ஸ்’ ஆற்றின் கரையில் உள்ள சோலையிலே, புல் மீதில் சாய்ந்தவாறே தூக்கமிலாச் சொப்பனத்தில் திளைக்கலானேன் சிற்றலைகள் ஓடுகிற ஆற்று நீரில் செவ்வந்திச் சூரியனின் முகத்தைப் பார்த்தேன் புற்தரையில் சிறுதாரா நடந்து போகும் புதர் புதராய் ரோஜாக்கள் பூத்து நிற்கும் தத்தி வரும் அலைகளிலே தவழ்ந்து வீசும் காற்றின் இதம் தானென்ன? கரையின் மீது எத்திசையும் மின்விளக்கு வெளிச்சம். இங்கே இயற்கையொடு செயற்கையும்… மேலும் »

கருத்திடுக

ஆசிரிய வாண்மை

அம்புவியில் மாணவர்கள் வென்றி பெறக்காரணமே ஆசிரிய வாண்மை என்று சொல்லு – அவர் அடிபணிந்து வாழ்த்துக்கூறி நில்லு – பிள்ளை வெம்பி நிற்கும் வேளையிலே அன்பு மிகக் கொண்டணைத்து வெற்றி பெறச் செய்யும் நல்ல ஆசான் – அவன் விரட்டுவது துன்பம் என்னும் மாசாம். நாளைய சமூகத்தினர் வாழ வழி செய்திடுவோர் நல்ல ஆசிரியர் என்பதுண்மை – அவர் நாட்டுவது பிள்ளை உள வண்மை – வரும் காலம் ஒளி… மேலும் »

கருத்திடுக

விண்ணகத்தின் ஒரு பாதி

செங்கயல்போல் நெடுங்கண்கள் உயிரை வாங்கும் சிவந்திருக்கும் இதழ்களிலே தேனும் தேங்கும் அங்கமெல்லாம் செம்பொன்போல் ஒளிரும் விந்தை அழகென்ன? ரதிதேவி மகளோ இப்பெண்? செங்கமல முகத்தினிலே நாணம் வந்து சிவப்பேற்ற, என்னுயிரும் சிலிர்ப்பதென்ன? பைங்கிளியின் நடையழகில் எந்தன் நெஞ்சம் பஞ்சாகப் பறப்பதென்ன? பாவிப்பெண்ணே! இவ்வாறு கவிதைபல நாங்கள் செய்தோம் இடையழகும் நடையழகும் மிகவும் சொன்னோம் செவ்விதழில் தேன்குடமும், நூலைப் போலச் சிற்றிடையும், சேலைப்போல் விழியும் கொண்டு நல்விதமாய் ஆண்மகனைப் பேணி, அன்னான்… மேலும் »

கருத்திடுக

விடியும் வரை கனவுகள்

எழுத்தாளர் விழா,கன்பரா, 2004, கவியரங்கக் கவிதை அரங்கத் தலைவர் அம்பி அவர்களை நிந்தாஸ்துதி செய்தல் எம் மொழி சிறக்கப் பொழுதெலாம் உழைத்து இன் தமிழ் வளர்ப்பவர் பெரியோர் தம்மை, நம் தமிழ்த் தாய்க்கு அருந்தவப் புதல்வன் இவன் எனல் வழக்கு; எனில் இந்த அம்பியோ ‘அறிவி லாதவன்’; உலகில் ஆதியாம் தமிழ் மகளுக்குத் தம்பி எனத் தகையோன்; அவன் பாதம் தலை மிசை வைத்தனன் யானே. அவை அடக்கம் செந்தமிழில்… மேலும் »

கருத்திடுக