ஏலியன் கதைகள்

விழிமைந்தனின் ஏலியன் கதைகள் |  கலை இலக்கியக் கள வெளியீடு அறிமுகம் ‘ஏலியன் கதைகள்’ வேற்றுக்கிரக உயிரினங்களைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட கற்பனைக் கதைகளாகும். இலங்கையின் ‘தினக்குரல்’ பத்திரிகையில் தொடராக வெளிவந்த இக்கதைகள் 2014 ஆம் ஆண்டு நூலாக வெளிவந்தன. விஞ்ஞானம், தொழில்நுட்பம், பௌதிகம், உயிரியல் ஆகிய துறைகளைப்பற்றிய பயனுள்ள தகவல்கள் பல இக்கதைகளில் பொதியப்பட்டுள்ளன. வைத்தியர், எழுத்தாளர் எம். கே. முருகானந்தன் அவர்கள் வழங்கிய அணிந்துரை ஆச்சரியமும் புதுமையும்… மேலும் »

2 கருத்துக்கள்

கவிவிதை

விழிமைந்தனின்  கவிவிதைகள் | தேற்றம் வெளியீடு அறிமுகம் ‘கவிவிதை’ என்பது தமிழுக்கு ஒப்பீட்டளவில் புதிய வடிவமாகும். ‘பாட்டிடையிட்ட உரைநடை’ என்பது சிலப்பதிகார காலத்திலிலேயே வழக்கிலிருந்தாலும் ‘கவிவிதைகள்’ ஒவ்வொன்றும் உள்ளடக்கத்தில் தன்னிறைவு உடையவை என்றவகையில் வெறுமனே உருவத்தால் மட்டும் வரையறுத்துவிட முடியாதவையாகும். உள்ளடக்கத்தில் சிறுகதைகளையும், உருவத்தில் கவிதை நடையையும் கதைசொல்லற் பாங்கான உரைநடையையும் ஒத்தவை என்பதோடு தமக்குள்ளே முழுக்கவிதை ஒன்றுக்கு அல்லது கதை ஒன்றுக்கு விதையாக அமையக்கூடிய செய்திகளையும் தாங்கியவை கவிவிதைகள்.… மேலும் »

கருத்திடுக