கொரோனா, கோவிட் (COVID-19): ஒரு ஆழமான அறிமுகமும் ஐயம் தீர்த்தலும்.

தேற்றம் “மெய்ப்பொருள் காண்” அமைப்பு வழங்கிவரும் அறிவியல் கருத்தரங்குத் தொடர் வரிசையில், ஒரு இணையவழி நிகழ்வாக (ONLINE EVENT) “கொரோனா, கோவிட் (COVID-19): ஒரு ஆழமான அறிமுகமும் ஐயம் தீர்த்தலும்” எனும் நிகழ்வு கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி ஞாற்றுக்கிழமை நடந்தேறியது.

காலத்தின் தேவை கருதி, தமிழ் அமைப்பு ஒன்றினால், zoom செயலியைப் பாவித்து நடத்தப்பட்ட முதலாவது கருத்தரங்கு இதுவாக இருக்கலாம். புதிய தொழில் நுட்ப்பமொன்றைப் பாவிப்பதில் பார்வையாளர்களுக்கு இருந்த பழக்கமின்மை, சிரமங்கள் ஆகியவற்றையும் தாண்டி, வெற்றிகரமாக இந்த நிகழ்வு நடந்தேறியதுடன், பார்வையாளர்களுக்கு zoom செயலியின் பயன் பாட்டைக் கற்றுக் கொடுத்த மேலதிக நன்மையையும் இந்நிகழ்வு மூலம் கிடைத்ததது.

நிகழ்வில் நான்கு துறைசார் பேச்சாளர்கள் கலந்துகொண்டு தமது கருத்துரைகளை வழங்கினார்கள். “கொரோனா வைரஸ்: ஒரு ஆழமான அறிமுகம்” என்ற தலைப்பில் கலாநிதி. பவித்ரா வேங்கட கோபாலன் அவர்களும், ” கோவிட் நோய்ப்பரவலியல்: வடிவமைப்பும் எதிர்வுகூறல்களும்” என்ற தலைப்பில் கலாநிதி. ம. பிரவீணன் அவர்களும், “கோவிட் நோய்: அறிகுறிகள், நோயியலும், மருத்துவமனைகளின் தயார்நிலையும்.” என்ற தலைப்பில் வைத்திய நிபுணர். பூரணி முருகானந்தம் அவர்களும், “கோவிட் நோய்: நீண்டகால உடலியல், உளவியல் தாக்கங்களும் அவற்றிலிருந்து மேலெழுதலும்.” என்ற தலைப்பில் வைத்திய நிபுணர். நளாயினி சுகிர்தன் அவர்களும், ஆழமான கருத்துரைகளை வழங்கினர். உரைகள் எல்லாமே powerpoint presentation களோடு வழங்கப்பட்டது சிறப்பம்சம். நிகழ்வுகளை திரு. கிருஷ்ணா சர்மா அவர்கள் அழகாகத் தொகுத்து வழங்கினார். நிகழ்வின் இறுதியில் பார்வையாளர்கள் chat மூலம் கேட்ட ஆழமான கேள்விகளுக்குப் பேச்சாளர்கள் பதிலிறுத்தனர்.

சென்னையிலிருந்து சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட கலாநிதி. பவித்ரா வேங்கட கோபாலன் அவர்கள் நிகழ்வு நிறைவில், தாம் கலந்து கொண்ட COVID – 19 விழிப்புணர்வு நிகழ்வுகளுக்குள்ளேயே மிகவும் ஆழமான, துறைபோந்த பேச்சாளர்களைக் கொண்டிருந்ததும், பார்வையாளர்கள் மிகவும் புத்திசாலித்தனமான வினாக்களை எழுப்பியதும் இந்த நிகழ்வே எனக் குறிப்பிட்டிருந்தார். பார்வையாளர்களில் பலரும் தமது திருப்தியை வெளியிட்டனர்.

நிகழ்வின் முழுமையான காணொளியை இங்கே காணலாம்.

https://www.youtube.com/watch?v=6YSVgh7y0j0

இந்நிகழ்வில் குறிப்பிடப் பட்ட சில விடயங்களை அடிப்படையாக வைத்து இரு வாரங்களின் பின் அவுஸ்திரேலிய SBS அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கலாநிதி. பிரவீணனுடன் நேர்காணல் ஒன்றை நடத்தியது. அதன் ஒலிப்பதிவு கீழே:

https://www.sbs.com.au/language/tamil/audio/what-is-herd-immunity-and-will-it-protect-us-from-covid-19?fbclid=IwAR1IfK9FUEop_Dmg52jetA0Lp7vdMY8MurSCf6gAzo0P6JloSmk2vismTA

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.