ஆசிரிய வாண்மை

அம்புவியில் மாணவர்கள் வென்றி பெறக்காரணமே ஆசிரிய வாண்மை என்று சொல்லு – அவர் அடிபணிந்து வாழ்த்துக்கூறி நில்லு – பிள்ளை வெம்பி நிற்கும் வேளையிலே அன்பு மிகக் கொண்டணைத்து வெற்றி பெறச் செய்யும் நல்ல ஆசான் – அவன் விரட்டுவது துன்பம் என்னும் மாசாம். நாளைய சமூகத்தினர் வாழ வழி செய்திடுவோர் நல்ல ஆசிரியர் என்பதுண்மை – அவர் நாட்டுவது பிள்ளை உள வண்மை – வரும் காலம் ஒளி… மேலும் »

கருத்திடுக

ஆநிரை கவர்தல்: தமிழர்களின் பண்பாடா?

இன்னுமொரு தலைப்பு: அவுட்-ஒஃ ப்- ஆபிரிக்காகவும், ஆரியரும், ஆநிரையும் ஆநிரை கவர்தல் என்றால் என்ன என்பதையே பலர் அறியாமல் இருக்கலாம். எதிரிகளுக்குச் சொந்தமான கால்நடைகளைப் பலவந்தமாக ஓட்டிக்கொண்டு வருவதையே அல்லது கைப்பற்றி வைத்திருப்பதையே ஆநிரை கவர்தல் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. எதிரிகள் தமக்குச் சொந்தமான கால்நடைகளைத் திரும்பப் பெறவே பார்ப்பார்களாதலால் இரு தரப்புக்கும் போர் மூளும். எனவே ஆநிரை கவர்தலென்பது ஒரு வன்னடவடிக்கை (aggressive act) அல்லது போருக்கு… மேலும் »

1 கருத்து

தமிழ் பௌத்தம்

தமிழ் பௌத்தம்: இது ஒரு மிகப்பெரிய விடயப் பரப்பு. உண்மையிலே, தமிழுக்கும் அல்லது தமிழருக்கும் பௌத்தத்துக்கும் உள்ள தொடர்பைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இவ்விடயத்தைப்பற்றி என்னைவிட அதிகம் அறிந்த பல அறிஞர்கள் நூல்களும் நீண்ட கட்டுரைகளும் எழுதியுள்ளனர். ஆகவே என்னுடைய இந்தக்கட்டுரையின் நோக்கம் புதிய விடயங்களை வெளிக்கொண்டு வருவதோ ஊகிப்பதோ அல்ல. அப்படியானால் ஏன் இதை எழுதுகிறேன் என்று கேள்வி எழலாம். இதற்குப்பதில் என்னவெனில், இன்றைக்குத் தமிழர்களில் பலருக்கு, ஒருகாலத்தில்… மேலும் »

1 கருத்து

மிருகப்பலியும் வேள்வியும்

“பகடு இடந்து கொள் பசுங் குருதி இன்று தலைவீ! பலிகொள்!!!” என்ற குரல் எண்டிசை பிளந்து மிசைவான் முகடு சென்று உரும் இடிந்ததென முழங்க உடனே மொகுமொகென்று ஒலி மிகும் தமருகங்கள் பலவே! — கலிங்கத்துப்பரணி – காளி கோயில் வர்ணனை (காலம்: கிபி 1110) மிருக பலி – நாகரீகமடைந்த, மனிதத் தன்மையுடன் வாழ விரும்பும் ஒரு தற்கால சமூகத்துக்கு ஏற்புடையது அல்ல. முற்றுப்புள்ளி. மிருகப்பலியை ஆதரித்து (அல்ல,… மேலும் »

கருத்திடுக

எண்ணும் முறை: தமிழரைப் பார்த்து ரோமர்களா? ரோமரைப் பார்த்து தமிழர்களா?

ஒரு விடயம் கவனித்தீர்களா? தமிழில் ‘9’ என்ற எண்ணக்கருவுக்கு தனி ஒலிவடிவம் இல்லை. “பத்துக்கு முந்தியது” என்ற கருத்துப்படவே அதன் ஒலிவடிவம் இருக்கிறது. ஆனால், இந்தோ ஆரிய மொழிகளில் 9 இற்குத் தனி ஒலிவடிவம் உண்டு. இதேபோல, ரோம இலக்கங்களில் 9 இற்குத் தனி வரிவடிவம் இல்லை. “பத்துக்கு முந்தியது” என்ற கருத்துப்படவே அதன் வரிவடிவம் இருக்கிறது. உதாரணம்: 7,8,9,10 தமிழ்: ஏழு, எட்டு, ஒன்பது (ஒன்-பத்து), பத்து ஆங்கிலம்:… மேலும் »

கருத்திடுக

சோழ சாம்ராஜ்யம்: சூரியன் மறைந்தது!

சோழ சாம்ராஜ்யம்: சூரியன் மறைந்தது! சோழ அரச வம்சத்தினர் சூரிய வம்சத்தினர் என்று தங்களைச் சொல்லிக்கொண்டவர்கள். சோழ மரபிலே “ஆதித்தன்” என்ற பெயர்கொண்ட மூவர் இருந்தார்கள். மூவருமே இணையில்லாத வீரர்கள். ஒருவர் (ஆதித்த சோழர்) அரசாக இருந்த சோழ ராஜ்யத்தைப் பேரரசாக ஆக்கிய பிறகு இயற்கை மரணம் எய்தினார். இன்னொருவர் (இராஜாதித்யர்), பேரரசாக வந்துவிட்ட சோழ சாம்ராஜ்யத்தைப் பெரும் பேரரசு ஆக்கும் தருவாயில் போர்க்களத்தில் வீழ்ந்தார். மூன்றாமவர் (ஆதித்த கரிகாலர்)… மேலும் »

கருத்திடுக

வாசகர்களுக்கு ஒரு ‘கதை’

வாசகர்களுக்கு ஒரு ‘கதை’ சொல்லப் போகிறேன். முதலாம் பராக்கிரமபாகுவின் யாழ்ப்பாண ஆக்கிரமிப்புப் பற்றிய ஒரு ‘கதை’. இது உண்மையில் கதையல்ல. வரலாற்றில் இப்படித்தான் நடந்திருக்கும் என்று மேற்கொள்ளப்படுகின்ற ஒரு கற்றறிந்த ஊகங்களின் தொடர் (series of educated guesses). இதை நான் ‘கதை’ என்று அழைப்பதற்குக்காரணம் இதுதான். இந்தக் ‘கதை’ யானது ஏற்கெனெவே நான் எழுதியிருக்கும் பல பதிவுகளின் அடிப்படையிலானது. என்னுடைய ஊகங்களுக்கான காரணங்களை அந்தப்பதிவுகளில் விரிவாகக் கூறியிருக்கிறேன். மறுபடியும்… மேலும் »

1 கருத்து

‘வெளிநாடு’ என்னும் வேலை

‘வெளிநாடு’ என்னும் வேலை (புலப்பெயர்வு பற்றியும் புலம்பெயர் தமிழர்கள் பற்றியும் தாயகத்தில் இருக்கும் பார்வை குறித்தான ஒரு சிறு விமர்சனம்) “திரு சின்னத்தம்பி கந்தையா காலமானார். அன்னார் காலஞ்சென்ற தையல்நாயகியின் அன்புக்கணவரும், ஜெகன் (நீர்ப்பாசனத் திணைக்களம் வவுனியா), குகன் (ஆசிரியர் யா/விக்னேஸ்வர வித்தியாசாலை, துன்னாலை), வரதன் (ஜேர்மன்), குணாளன் (லண்டன்), விஜயன் (சுவிஸ்), பாமா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஈஸ்வரி, Dr. பாமினி, கனகா (ஜேர்மன்), மணிமேகலை (லண்டன்),… மேலும் »

கருத்திடுக

கவிராட்சசன்

    சோழர் காலமென்பது பலவகைகளில் தமிழர்களின் பொற்காலமென்பதை அறிந்திருப்பீர்கள். அதாவது  படைத்துறை, பூகோள  அரசியல்,  ராஜதந்திரம்,  கடலாதிக்கம்,  வெளிநாட்டு வர்த்தகம்,  கட்டடக்கலை, லலித  கலைகள், தமிழ் இலக்கியம் இவையெல்லாவற்றுக்குமே ஒரு பொற்காலம் அது.  பொதுவாக, ஒரு பேரரசின் இலக்கிய / கலைத்துறைப்  பொற்காலமானது அதனுடைய படைத்துறைப் பொற்காலத்திற்குச் சற்றுப் பிற்பட்டே  அமையும். அதாவது, போர்களில்  வெற்றிபெற்று, எல்லைகளை  விஸ்தரித்து, வெளிநாடுகளில் இருந்து செல்வங்களைக் கொண்டுவந்து குவித்து, மக்கள் யாவரும்… மேலும் »

கருத்திடுக

சோழர்களின் போர்க்குற்றங்களும் பெண்களுக்கெதிரான வன்முறைகளும்: ஒரு சுருக்கக் குறிப்பு.

தலைப்பைப் பார்த்ததுமே பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். “வலியார்முன் தன்னை நினைக்க: தான் தன்னில் மெலியார்மேற் செல்லும் இடத்து.” என்பது வள்ளுவர் வாக்கு. காலச்சக்கரம் சுழல்கிறது. ஒருகாலத்தில் சோழர்கள் வலியவர்களாக இருந்தார்கள். தங்களிலும் மெலியவர்களை, குறிப்பாக எதிரிநாட்டுப் பெண்களை அவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதை நாங்கள் தெரிந்துகொள்வது அவசியம். சோழர்களைப்பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. அவர்களது படைத்துறைச் சாதனைகள் பிரமிக்கத்தக்கவை. அவர்களது தந்திரோபாய நகர்வுகள் உச்சமானவை. அவர்களது கட்டிடக்கலை உலகை இன்றும்… மேலும் »

2 கருத்துக்கள்