நாட்டுப் பாட்டு – 1

டிங்கிரி டிங்கிரி பெல் – மிதிவண்டி
டிங்கிரி டிங்கிரி பெல்.
இரண்டு மிதி இறுக்கி மிதி
டிங்கிரி டிங்கிரி பெல்.

நாட்டினிலே பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு
நடந்தெங்கும் போவதென்றால் வேலைக்காகாது
வீட்டினிலே வேலைகளோ நிரம்ப இருக்குது
விரைந்து செய்து முடித்திடவே சைக்கிள் இருக்குது.

டிங்கிரி டிங்கிரி பெல் – மிதிவண்டி
டிங்கிரி டிங்கிரி பெல்.
இரண்டு மிதி இறுக்கி மிதி
டிங்கிரி டிங்கிரி பெல்.

அப்பையரின் வீட்டடியில் பெட்ரோல் கடையுண்டு.
ஆனைக்குட்டி மதவுவரை அதற்கு கியூ உண்டு
நிற்பதற்குத் தொடங்கிவிட்டால் பலநாள் ஆகுது
நேரமில்லை வேலைகளோ நிறைய இருக்குது

டிங்கிரி டிங்கிரி பெல் – மிதிவண்டி
டிங்கிரி டிங்கிரி பெல்.
இரண்டு மிதி இறுக்கி மிதி
டிங்கிரி டிங்கிரி பெல்.

ஐயாயிரம் ரூபாவுக்கும் பெட்ரோல் விற்குது
அதைவாங்கி விட்டாலோ மக்கர் அடிக்குது
ஐயையோ முகர்ந்திட வேறேதோ மணக்குது
அதுவெல்லாம் தேவையில்லை சைக்கிள் இருக்குது

டிங்கிரி டிங்கிரி பெல் – மிதிவண்டி
டிங்கிரி டிங்கிரி பெல்.
இரண்டு மிதி இறுக்கி மிதி
டிங்கிரி டிங்கிரி பெல்.

டாக்குத்தர் சொல்லிவிட்டார் கொழுப்பு இருக்கென்று
டக்கென்று குறைக்காவிடில் அட்டாக் தானென்று
சாக்குப்போக்குச் சொல்லிடாமல் சைக்கிளை எடு
சகல நோயும் பறந்திடவே சைக்கிள் ஓடிடு

டிங்கிரி டிங்கிரி பெல் – மிதிவண்டி
டிங்கிரி டிங்கிரி பெல்.
இரண்டு மிதி இறுக்கி மிதி
டிங்கிரி டிங்கிரி பெல்.

இஷ்டத்துக்கு எரிபொருளை எரிப்பதை விடு
இருப்பதொரு பூமி அதை இழந்திடாதிரு
கஷ்டத்திலும் நன்மையுண்டு சைக்கிளைப்பழகு
கப்பல் வந்த பின்னாலும் நீ சைக்கிளை உழக்கு!

டிங்கிரி டிங்கிரி பெல் – மிதிவண்டி
டிங்கிரி டிங்கிரி பெல்.
இரண்டு மிதி இறுக்கி மிதி
டிங்கிரி டிங்கிரி பெல்.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.