ஆசிரிய வாண்மை

அம்புவியில் மாணவர்கள் வென்றி பெறக்காரணமே
ஆசிரிய வாண்மை என்று சொல்லு – அவர்
அடிபணிந்து வாழ்த்துக்கூறி நில்லு – பிள்ளை
வெம்பி நிற்கும் வேளையிலே அன்பு மிகக் கொண்டணைத்து
வெற்றி பெறச் செய்யும் நல்ல ஆசான் – அவன்
விரட்டுவது துன்பம் என்னும் மாசாம்.

நாளைய சமூகத்தினர் வாழ வழி செய்திடுவோர்
நல்ல ஆசிரியர் என்பதுண்மை – அவர்
நாட்டுவது பிள்ளை உள வண்மை – வரும்
காலம் ஒளி பெற்றிடவே வேலை மிகச் செய்து நல்ல
கல்வி விளக்கேற்றுகிற வாண்மை – அது
களத்தில் ஆடும் வீரம் ஒத்த ஆண்மை.

ஆசிரியர் தினக் கவிதை (1994 இல் எழுதியது).

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *