தமிழர்களின் இராஜ தந்திரத்துக்கு ஒரு உதாரணம்: மூன்றாம் குலோத்துங்க சோழன்

மூன்றாம் குலோத்துங்க சோழன் சோழ சாம்ராஜ்ஜியத்தின் இறுதிச் சக்கரவர்த்தி. இவன் காலத்துக்குச் சில தலைமுறைகள் முன்னிருந்தே சோழ சாம்ராஜ்ஜியத்தின் வலிமை இறங்கு முகத்தில் இருந்து வந்தது. தொடர்ச்சியாக நடந்து வந்த போர்களால் வீரப் பெருங்குடிகள் பல அழிந்து விட்டன. வீர ரத்தம் வற்றிக்கொண்டு வந்துவிட்டது. ராஜேந்திரன் முதலிய பேரரசர்களால் நொறுக்கப்பட்ட சோழர்களின் எதிரிகள் நாலா பக்கத்திலும் பழி வாங்கச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். உண்மையில் சோழ சாம்ராஜ்ஜியம் அழிவின் விளிம்புக்கு வந்துவிட்டது.… மேலும் »

கருத்திடுக