அணு ஆயுதப் போர் அபாயம்

“Now I Am Become Death; The Destroyer Of Worlds.”

{
कालोऽस्मि लोकक्षयकृत्प्रवृद्धोलोकान्समाहर्तुमिह प्रवृत्तः|
ऋतेऽपि त्वां न भविष्यन्ति सर्वे येऽवस्थिताः प्रत्यनीकेषु योधाः ॥

Kaalosmi Lokakshayakrit Pravrddho.
Lokaan Samahartum Iha Pravrttah.

“நான் இப்போது கால தேவனும் ஆகின்றேன் – உலகங்களை அழிப்பவன் ஆகின்றேன்”
}

அழிவு மிகுந்த பாரத யுத்தத்திற்கு தயாராகி நின்ற வேளையிலே, தயங்கி நின்ற அர்ஜுனனைப் பார்த்துக் கிருஷ்ணன் சொன்னது.

முதலாவது அணுக்குண்டுச் சோதனை நடந்த போது, அது எழுப்பிய பார்க்கப் பயங்கரமான காளான் முகிலைப் (mushroom cloud) பார்த்து வெலவெலத்துப் போன தலைமை அமெரிக்க அணு விஞ்ஞானி ஒபென்ஹெய்மர், இதே வசனங்களைச் சொன்னார். வெள்ளையரானாலும், விஞ்ஞானி ஆனாலும் அவர் கீதை படித்திருந்தார்.

வட கொரியாவும் அமெரிக்காவும் முறுகிக் கொள்வதைப் பார்க்கும் போது, பயங்கரமான அணு ஆயுதங்கள் பொறுப்பற்ற மனிதர்களின் கைகளில் சேர்ந்தால் உலகு என்னவாகும் என்று யோசிக்கத் தான் வேண்டியிருக்கிறது. வெறுமனே பூச்சாண்டி காட்டுவதற்கு வைத்திருக்கிறார்கள் என்றும், பாவிக்கிற அளவுக்கு முட்டாள்கள் அல்ல என்றும் முன்பு கொஞ்சம் நம்பினோம். தற்போதுள்ள தலைமைகள் அந்த நம்பிக்கையைத் தரவில்லை.

காத்தல் கடவுளான விஷ்ணு, பூபாரம் குறைப்பதற்கு வேண்டி அழித்தற் கடவுளாக மாறுவதற்கு வேண்டிய காலம் கனிந்திருந்ததைக் கண்ணனின் சொற்கள் குறித்தன.

இந்த உலகத்தில் பல அழகான விடயங்களை மனிதன் உருவாக்கிக் காத்தான். அவனே இவ்வுலகிற்கு அழித்தற் கடவுளாகவும் வரப் போகிறானா?

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *